சமாதானக் கல்வி எனும் எண்ணக்கருவும் தற்காலத்தில் அதன் அவசியப்பாடும்.

dc.contributor.authorAfra, M. I. F.
dc.contributor.authorFathima Sheefa, M. I.
dc.date.accessioned2021-08-16T06:58:14Z
dc.date.available2021-08-16T06:58:14Z
dc.date.issued2021-04-04
dc.description.abstractசமாதானக் கல்வி என்பது நாம் சிந்திக்கின்ற தன்மையை மாற்றுவதோடு சமாதனம் நீதி போன்றவற்றுக்கான கற்கைகளை ஊக்குவிக்கின்ற ஒரு பங்குபற்றுதலுடனான நடைமுறையாகும். சமாதானத்தை உருவாக்குவதற்கும், அதனைக் கட்டியெழுப்புவதற்கும், பாதுகாப்பதற்கும் மக்களுக்கு ஆற்றல்கள், சக்திகள் தேவைப்படுகின்றன. அவர்களுக்குத் தேவையான சக்தி, ஆற்றல் போன்றவற்றை மனித உரிமைகள், அபிவிருத்தி, ஜனநாயகம், சுற்றுச் சூழல், மோதல் தீர்வு, ஆமாதலுக்கான காரணிகளை கண்டறிதல், பகுப்பாய்வு செய்தல், அவற்றை தீர்த்தல், சமாதானம் பற்றியும் அதனை உருவாக்குதல், கட்டியெழுப்புதல், பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன எண்ணக்கருக்களை கல்வியூடாக பெற்றுக் கொடுப்பதே கமாதானக் கல்வியின் நோக்கமாகும். மனிதப் பாதுகாப்பு, ஆயுதத் ; தவிர்ப்பு பற்றிய விடயங்கள், இணக்கப்பாடு, முரண்பாட்டுத் தவிர்ப்பு, தொடர்பூடகம் பற்றிய விமர்சன ரீதியான புரிந்துணர்வு, ஆண்,பெண் இருபாலர் கற்கைகள். அகிம்சை, சர்வதேச உறவுகள் போன்ற எல்லாம் சமாதானக் கல்வியின் அங்கங்களாகும். சமூகப்பிராணியாகிய மனிதன் தன்னால் தனித்து வாழ முடியாததனால் பிறருடன் இணைந்தே தனது அன்றாட வாழ்க்கையை கடத்திச் செல்கின்றான். இதன்பொழுது, பல்வேறு பட்ட உள்ளக மற்றும் வெளியகக் காரணிகளால் தங்களுக்குள் வெவ்வேறு விதங்களில் முரண்பாடுகளுக்குள் அகப்பட நேர்கின்றது. இது தனி நபர்களுக்கிடையில் என்று ஆரம்பித்து குடும்பம், குழுக்கள், வேலைத் தளங்கள், பிரதேசங்கள், நாடுகள் என்றளவு நீட்சியடைகின்றன. அந்நிலையில் அமைதியான சிறந்த வாழ்க்கை வாழ வேண்டுமாயின் அதற்கு மிக அத்தியாவசியமாக காணப்படுவது சமாதானம் ஆகும். இது தொடர்பான கல்வி மற்றும் அதன் அவசியங்கள் தொடர்பில் தெளிவின்மையால் இன்று சமாதானம் என்பது வெறும் ஏட்டுச் சுரக்காய் போலவே உள்ளது. இது ஆய்வுப் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடராக சமாதானக் கல்வி என்பதன் மூலம் நாடப்படுவது என்ன? தற்காலத்தில் சமாதானக் கல்வி ஏன் அவசியப்படுகின்றது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க வேண்டிய கடப்பாடு இன்று எழுந்துள்ளது. இதனால் தான் இவ் ஆய்வானது சமாதானக் கல்வி எனும் எண்ணக்கருவை விளக்குதல் மற்றும் தற்காலத்தில் சமாதானக் கல்வியின் அவசியப்பாட்டை தெளிவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களை தன்னகத்தே கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பண்புரீதியான ஆய்வாகும். இவ் ஆய்வில் இரண்டாம் நிலைத் தரவுகளாக இத் தலைப்புத் தொடர்பான நூல்கள், ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆய்வுகளின் உட்பரிமானங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையதளம் என்பன மீழாய்வுக்குட்படுத்தப்பட்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.en_US
dc.identifier.citation8th International Symposium 2021 on “Promoting Faith-Based Social Cohesion Through Islamic and Arabic Studies”. 04th April 2021. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 280-292.en_US
dc.identifier.isbn978-624-5736-14-0
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5729
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.en_US
dc.subjectமோதல்en_US
dc.subjectயுத்தம்en_US
dc.subjectசமாதானம்en_US
dc.subjectசமாதானக் கற்கைen_US
dc.titleசமாதானக் கல்வி எனும் எண்ணக்கருவும் தற்காலத்தில் அதன் அவசியப்பாடும்.en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
சமாதானக் கல்வி pp. 280-292.pdf
Size:
306.67 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: