பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் ஆண் மாணவர்களின் அனுமதி வீதம் குறைவதற்கான காரணங்கள் - சிலாஃநஸ்ரியா மத்திய கல்லூரியினை மையப்படுத்திய ஆய்வு
Loading...
Date
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
கல்வி என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். அந்த
வகையில் மாணவர்களின் உயர்கல்வியினை தொடர்வதில் திறவுகோளாக இருப்பது க.பொ.த
உயர்தரப்பரீட்சையாகும். இப்பரீட்சையில் தேற்றி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியினை
தொடர்வதற்கான வாய்ப்பினைப் பெருவதில் ஆண் மாணவர்கள் பெரிதும் பின்னடைவினை
அடைந்துவருகின்றனர். புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரத்தி;ல் அமைந்துள்ள சிலாஃநஸ்ரியா
மத்திய கல்லூரியில் பல்கலைக்கழக அனுமதியில் ஆண் மாணவர்கள் பெரும் பின்னடைவினை
எதிர்நோக்குகின்றனர். கடந்த ஐந்து வருட காலமாக பல்கலைக்கழக அனுமதியில் ஆண்
மாணவர்களின் தெரிவு வீதமானது மிகப்பின்னடைவினை எதிர்நோக்கியுள்ளது. அதற்கான
தீர்வுகளை முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக
முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. நேர்காணல்இ
குழுக்கலந்துரையாடல் என்பன முதலாம் நிலைத் தரவுகளாகவும் பாடசாலை புள்ளிவிபர அறிக்கை,
இணையதளம், சஞ்சிகைகள், அதனுடன் தொடர்புடைய ஆய்வுகளும் இரண்டாம் நிலைத்
தரவுகளாகவும் பயன்படுத்தப்பட்டு அளவுசார் மற்றும் பண்புசார் ஆய்வு முறையில் அளவை நிலை
ஆய்வு முறைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து சிலாஃநஸ்ரியா மத்திய கல்லூரியில்
கல்வி கற்ற ஆண்மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறாமைக்கான காரணங்களாக
பொறுப்பு, வறுமை, உயர்தரத்திலும் படித்து பின் பல்கலைக்கழம் சென்றும் படிக்க வேண்டும்
என்கின்ற மன உணர்வு: காதல், வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற
உணர்வு, தனிப்பட்ட உளவியல் ரீதியான பிரச்சினைகள் போன்ற பல்வேறு காரணங்கள்
கண்டறியப்பட்டன. இவற்றுக்கான தீர்வுகளாக அரசு வறிய மாணவர்களை இனங்கண்டு
அவர்களுக்கு நிதி உதவி வழங்கல், பல்கலைக்கழக கல்வி தொடர்பாக மாணவர் மத்தியில்
ஊக்கத்தினையும், சிறந்த அபிப்ராயத்தினையும் ஏற்படுத்தல் போன்றவற்றின் மூலம் ஆய்வுப்
பிரதேசப்பிரச்சினைகளுக்கு ஓரலவேனும் தீர்வினை பெற முடியும் என்பதோடு இவ் ஆய்வானது
எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும் போது வேறுபட்ட பெறுபேறுகள் கிடைக்க வழிவகைகள் உண்டு.
Description
Keywords
Citation
6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 893-898.