சுதந்திரத்திற்குப் பின் இலங்கை முஸ்லிம் கல்வி: அண்மைக்கால பல்கலைக்கழக அனுமதி பற்றிய மதிப்பீடு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

South Eastern University of Sri Lanka

Abstract

இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனமாகும். இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழும் இலங்கை முஸ்லிம்கள் 2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி 9.7 வீதமாக காணப்படுகின்றனர். இலங்கை சுதேசிகளின் கல்வி வரலாற்றில் ஏற்பட்ட எழுச்சியும், வீழ்ச்சியும் அந்நிய ஆட்சியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றிலும் ஏற்பட்டுள்ளதை வரலாற்று ரீதியாக நாம் அறியலாம்.எமக்குக் கிடைக்கின்ற வரலாற்று ஆவணங்களில் இலங்கை முஸ்லிம்கள் அந்நிய ஆட்சியில் குறிப்பாக போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பொருளாதார, அரசியல், கலாசார ரீதியாக மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தினர்களாகக் காணப்பட்டனர். அவ்வாறே அவர்களது கல்வித்துறையும் திட்டமிட்ட முறையில் படிப்படியாக அழிக்கப்பட்டது. பௌத்தர்களும், தமிழர்களும் அந்நிய ஆட்சியினர் அறிமுகப்படுத்திய ஆங்கில மொழியிலான புதிய கல்விக் கொள்கையினால் ஓரளவு பலன்பெற்று கல்வி முன்னேற்றம் பெற்ற கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் தம்மிடையே காணப்பட்ட மரபு ரீதியான கல்வி முறையிலும் ஆழமான வீழ்ச்சியைக் கண்டனர். குறிப்பாக மிஷனரிக் கல்வியின் அபாயத்தை உணர்ந்ததால் தமக்கான கல்வித்துறையை வளர்த்து கொள்வதில் அதிக அக்கறையின்றி காணப்பட்டனர். இலங்கையின் ஏனைய சமூகத்தினரை விட முஸ்லிம்கள் 60 வருடங்கள் கல்வியில் பின்னோக்கிக் காணப்பட்டனர். பிரித்தானியர் ஆட்சியின் பிற் பகுதியில் இலங்கை முஸ்லிம்களிடையே கல்வியில் ஒருவித மறுமலர்ச்சி ஏற்படுவதை நாம் ஆய்வு ரீதியாக அறியலாம். இம்மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒருவராக அறிஞர் சித்தி லெப்பை காணப்படுகின்றார்.1890ஆம் ஆண்டுகளில் ஏற்படத் தொடங்கிய முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சி ஏற்ற இறக்க அம்சங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டு பல்கலைக்கழக அனுமதியிலும் ஏற்பட்ட மாற்றங்கள் முஸ்லிம் சமூதாயத்தின் கல்வி வரலாற்றில் மறுமலர்ச்சிக் கால கட்டங்களாகும். இக்கட்டுரை இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு கட்டங்களை ஆய்வு செய்வதுடன் முஸ்லிம் மாணவர்களின் அண்மைக்கால பல்கலைக்கழக அனுமதியில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் ஆராய முயலுகின்றது.

Description

Citation

6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 586-598.

Endorsement

Review

Supplemented By

Referenced By