குடும்பத்திலுள்ள தாய் தந்தையர் இருவரும் தொழில் புரிவதால் பிள்ளைகள் எதிர் நோக்கும் சவால்கள்: சம்மாந்துறை பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka.

Abstract

சமூகவியல் பரப்பில் குழந்தைகள் பிரதான இடத்தினை வகிக்கின்றனர். அவர்களை பண்படுத்தி நெறிப்படுத்துவது பெற்றோரி;ன் தலையாய கடமையாகும். இத்தகைய பணி குடும்பம் எனும் நிறுவனத்தின் ஊடாகவே செயலுரு காண்கின்றது. எனினும் முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் குழந்தைகள் பல்வேறு சவால்களினை எதிர் கொள்கின்றனர். ஆய்வுப்பிரதேசத்தில் பல்வேறு ஆய்வுகள் இது குறித்து மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் குறிப்பாக இவ் ஆய்வுத்தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இவ் ஆய்வு இடைவெளியை பூரணப்படுத்துவதற்காகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாளைய தலைவர்களாகிய சிறுவர்கள் குடும்பம் எனும் மிகச்சிறிய அலகினூடாகவே வழிப்படுத்தப்பட வேண்டியவர்களாக காணப்படுகின்றார்கள். இவ்வாறான குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் தொழில் புரிவதால் குழந்தை வளர்ப்பில் தாய் தந்தையர்கள் குழந்தைகளோடு செலவிடும் நேரம் குறைகின்றது. இது பல்வேறு சமூக சவால்களை ஏற்படுத்தி விடுகின்றது என்பதனால் தாய், தந்தையர் இருவரும் தொழில் புரிவதால் அக்குடும்பத்திலுள்ள பிள்;ளைகள் எதிர் நோக்கும் சவால்களை இனங்கண்டு அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதை நோக்காக கொண்டு இவ் ஆய்வுக்காக முதலாம், இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டன. முதலாம் நிலைத்தரவுகளை பெற்று கொள்வதற்காக நேரடி அவதானிப்பு, நேர்காணல், இலக்கு குழு கலந்துரையாடல்கள் மேற்கொள்ப்பட்டதுடன் இரண்டாம் நிலைத்தரவுகளை பெற்று கொள்வதற்காக சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சில தொழில் அதிகாரிகளின் அறிக்கைகள், இணையத்தளங்கள், சஞ்சிகைகள், நூல்கள் என்பனவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. இவ் ஆய்வில் கண்டு கொள்ளப்பட்ட பிரதான முடிவு என்னவெனில் ஒப்பீட்டு ரீதியில் தாய், தந்தையர் இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பத்திலுள்ள பிள்ளைகள் ஏனைய பிள்ளைகளை விட சில வகையான சமூக, உளவியல், கலாசார சவால்களை எதிர் கொள்கின்றனர் என்பதாகும். எனவே காலத்தின் தேவை கருதி இவ்வாறான ஆய்வுகள் ஆய்வுப்பரப்பில் பிரதான இடத்தினை வகிக்கின்றன எனலாம்.

Description

Citation

6th International Symposium 2019 on “Contemporary Trends of Islamic Sciences and Arabic studies for the Nation Development”. 12 December 2019. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka.

Endorsement

Review

Supplemented By

Referenced By