அரசியல் கட்சிகளில் மதக்காரணிகளின் செல்வாக்கு: இலங்கையை மையப்படுத்திய ஆய்வு (1978-2014)
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
இலங்கையின் அரசியற் கட்சிகளின் தோற்றம் 1930களின் பிற்பகுதியிலேயே
ஆரம்பமாகின்றது. டொனமூர் அரசியற் திட்டத்தின் சர்வஜன வாக்குரிமையின் விளைவு காரணமாக
அரசியற் கட்சிகள் உருவாவதற்கான அடித்தளத்தினை இட்டன. முதலில் இடதுசாரிக் கட்சிகளே
தோற்றம் பெற்றன. பின்னர் காலனித்துவ அரசிடம் இருந்து சுதந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளும்
நோக்கோடு ஐக்கிய தேசியக் கட்சி என்ற வலதுசாரிக் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சியில் ஏற்பட்ட
தலைமைத்துவ முரண்பாடு காரணமாக S.W.R.D.பண்டாரநாயக்கா இக்கட்சியில் இருந்து விலகி
சிங்கள மகாசபை மூலமும், பௌத்த மத தேசியவாதிகளின் ஆதரவோடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
தோற்றம் பெற்றது. 1956ல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள்
காரணமாகவும் மற்றும் பௌத்த மதத்தின் ஆதரவின் மூலம் இனவாத அரசியல் எழுச்சியுற்றும் மொழி,
மதம் என்பன அரசியல் மயமாக்கப்பட்டதோடு பிற்பட்ட காலத்தில் பௌத்த மதத்தின் செல்வாக்கு
அரசாங்க நிறுவனங்களில் தாக்கம் செலுத்தத் தொடங்கியது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சி
அதிகாரத்தினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாத அரசியலுக்கு ஆதரவு வழங்கியிருந்ததோடு
இவ்விரு கட்சிகளினால் உருவாக்கப்பட்ட யாப்புக்களில் பௌத்த மதம் அரச மதமாக
அங்கீகரிப்பட்டிருந்தது. மேலும் பௌத்த பீடங்களின் செல்வாக்கு கட்சியின் அரசியலினை
தீர்மானிப்பதாக அமைந்ததோடு இலங்கையின் அரசியல் கட்சிகளில் மதம் பிரிக்க முடியாத ஓர்
அம்சமாக விளங்கியது எனலாம். இலங்கையானது பல்லின கலாசாரத்தைக் கொண்ட நாடு ஆகும்.
இங்கு பல இனத்தவர்கள் வாழ்;வதோடு அவர்கள் பல மொழி பேசுபவர்களாகவும், பலவகையான சமய
நம்பிக்கை மற்றும் பாரம்பரிய கலாசார மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்த போதிலும்
இலங்கை அரசியலில் மதவாதம் தலைதூக்கும் தன்மையானது இனங்களுக்கிடையான ஒற்றுமையினை
சீர்குலைப்பதாக அமைவதோடு மட்டுமன்றி பெரும்பான்மை மதமாக பௌத்தம் இருந்த போதிலும்
இந்து, இஸ்;லாம், கிறிஸ்தவ மதங்களின் சுதந்திரத்தில் பௌத்த தேசியவாதக் குழுக்களும் மற்றும்
அவை சார்ந்த கட்சிகளும் தலையிடுகின்ற தன்மையானது சமாதான செயன்முறைகளுக்கும், மத
சுதந்திரத்திற்கும் தடையாக அமைவதோடு மட்டுமன்றி மத வன்முறைகளுக்கான காரணியாகவும்
விளங்குகின்றது. இந்த பின்னணியில் இவ் ஆய்வானது அரசியல் கட்சிகளில் மதக் காரணிகளின்
செல்வாக்கினை இலங்கையை மையமாகக் கொண்ட ஆய்வு செய்வதாக அமைகின்றது. இவ்
ஆய்வானது முதன்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை மையமாகக் கொண்டும், கட்சிக்
கோட்பாடு மதச்சார்பின்மை கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டும் வரலாற்று அணுகுமுறை
ஒப்பீட்டு அணுகுமுறையின் மூலம் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றது.
Description
Keywords
Citation
6th International Symposium 2016 on “Multidisciplinary Research for Sustainable Development in the Information Era”, pp 650-657.