சாதி முறைமையும் அதன் விளைவுகளும்: காரைநகரை மையப்படுத்திய சமூகவியல் ஆய்வு

dc.contributor.authorரமணி, அ.
dc.contributor.authorறிஸ்வான், எம்.
dc.date.accessioned2021-01-27T05:47:24Z
dc.date.available2021-01-27T05:47:24Z
dc.date.issued2020-06
dc.description.abstractகாரைநகர் பிரதேசத்தில் சாதி முறைமை பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. பண்புசார் ஆய்வு முறையூடாகவே இக்கட்டுரைக்கு தேவையான தகவல்கள் திரட்டப்பட்டன. நேர்காணல் மற்றும் அவதானம் போன்ற முறைகள் மூலம் பிரதான தரவுகள் பெறப்பட்டு, விபரிப்பு முறையில் பெறுபேறுகள் கலந்துரையாடப்பட்டுள்ளன. தரவுப் பகுப்பாய்வின்படி, காரைநகர் மக்கள் சாதி முறைமையினால் இன்றுவரை பல்வேறு விளைவுகளை அனுபவித்து வருகின்றமை இக்கட்டுரையில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, திருமண விடயங்கள், ஆலயப் பிரவேசத்தில் தடை, தண்ணீரைப் பெற்றுக்கொள்ளல், தொழில் மற்றும் நில விற்பனையில் பாகுபாடு, கலாச்சார விடயங்களில் புறமொதுக்கம், கல்வி மற்றும் சமூக அந்தஸ ;தின்மை போன்ற இன்னோரன்ன வழிகளில் பல்வேறு பாகுபாடுகளும் விளைவுகளும் இடம்பெறுகின்றமை இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. சாதி முறைமை குறித்த சில தரப்பினரை மேல்நிலையில் வைத்து அந்தஸ்து, அதிகாரம் போன்றவற்றை தக்கவைப்பதற்கும் இன்னும் சிலரை அடுக்கமைவில் கீழ் நிலையில் வைத்து நோக்குவதற்கும் காரணியாய் அமைந்துள்ளது. சாதி முறைமையை காரைநகரில் முற்றுமுழுதாக ஒழிப்பதென்பது கடினமானதொன்றாகும். ஏனெனில் சாதியானது மக்களின் மன உணர்வுடன், பண்பாட்டுடன் கலந்த ஒன்றாகவும் அவர்களின் வாழ்வியலிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. எனவே இத்தகைய விளைவுகளை குறைப்பதற்கு கல்வி, விழிப்புணர்வு, அரச செயற்பாடுகள், ஏனைய நிறுவனங்களின் நடவடிக்கைகள் காத்திரமாய் அமையும்.en_US
dc.identifier.citationKALAM -International Research Journal, 13(2),2020 pp. 49-66.en_US
dc.identifier.issn13916815
dc.identifier.issn27382214
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5262
dc.language.isoen_USen_US
dc.publisherFaculty of Arts and Culture, South Eastern University of Sri Lankaen_US
dc.subjectசாதி முறைமைen_US
dc.subjectசமூக அடுக்கமைவுen_US
dc.subjectகாரைநகர்en_US
dc.subjectசமூக விளைவுகள்en_US
dc.titleசாதி முறைமையும் அதன் விளைவுகளும்: காரைநகரை மையப்படுத்திய சமூகவியல் ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
6. K2020 (49-66).pdf
Size:
378.29 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: