நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டப்பளப் பிரதேசத்தில் தென்னை மரத்தின் கீழ் நடப்படும் நீண்ட கால மற்றும் குறுகிய கால பயிர்கள் பற்றிய ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka, University Park, Oluvil #32360, Sri Lanka
Abstract
உலக நாடுகள் பெருமளவில் இடப் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்துவரும் அதேவேளையில் இலங்கை போன்ற சிறிய நாடுகளும் இப்பிரச்சினைகளுக்கு விதிவிலக்கல்ல. இப்பிரச்சினைக்காக உலக நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஒரு தீர்வுதான் விவசாயக் காடாக்கம். இம்முறையில் தென்னையின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை முறையும் ஒன்றாகும். அந்தவகையில் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் அட்டப்பளப்பிரதேசத்தில் இம்முறை காணப்படுவதை அடையாளப்படுத்தி அப்பயிர்செய்கை முறை எதிர் கொள்ளும் சவால்களை மிக முக்கிய பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதானமாக முதலாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் கத்தரி, வெண்டி, மிளகாய், பழவகைகளான பப்பாசி வாழை போன்றனவும் இவை தவிர அன்னாசி சிறியளவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறையினை விருத்தி செய்வதற்குறிய பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தும் போதியளவிலான விருத்தி இப்பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை. எனவேதான் திவிநெகும போன்ற திட்டங்களில் இம்முறை பயிர்ச் செய்கைக்கான உதவிகளையும் கடன் வசதிகளையும் வழங்குவதனூடாக இம்முறைப் பயிர்ச்செய்கையினை மேலும் விருத்தி செய்யலாம்.