அதிகாரப்பரவலாக்கமும் உள்ளூராட்சி அரசாங்கத்தின் சுயாட்சியும்: இலங்கை உள்ளூராட்சி அரசாங்க முறைமை குறித்த ஓர் விமர்சன நோக்கு.

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.

Abstract

நவீன அரசுகளில், உள்ளூராட்சி அரசாங்கங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் மற்றும் அவற்றின் சுயாதீனத்தன்மை என்பன உள்ளூர் ஐனநாயகம் மற்றும் உள்;ர் அபிவிருத் தியை வலுப்படுத்துவதற்கு அவசியமான நிபந்தனைகளாக வலியுறுத்தப்படுகின்றன. இருந்தபோதிலும் இவற்றைப் பெற்றுக்கொள்வதில் உள்ளூராட்சி அரசாங்கங்கள் பல்வேறு மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், அவற்றின் சுயாதீனமான செயற்பாடுகளும் பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் உள்ளூர் மட்டத்தில் மக்களின் பங்குற்றுதலை அதிகரிப்பதற்கும் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கும் போதுமான அதிகாரம் மற்றும் சுதந்திரம் அற்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி அரசாங்கங்கள் செயற்படுகின்றன. இந்நிலையானது, அதிகாரப்பரவலாக்கத்தின் மூலம் உள்;ராட்சி அரசாங்க அலகுகளுக்கு வழங்கப்படுகின்ற சட்டபூர்வமான ஆளுகை மற்றும் சுய நிருவாகத்திற்கான உரிமை என்பன குறித்து கேள்விக்குட்படுத்துகின்றது. அந்தவகையில், இவ்வாய்வானது உள்ளூராட்சி அரசாங்கங்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் சுயாதீனத்தன்மை என்பன உள்ளூ ராட்சி அரசாங்கங்களின் வினைத்திறனான செயற்பாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத் துகின்றது என்பதனை ஆய்வு செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. பண்பு ரீதியிலான முறையியலின் அடிப்படையில் உள்ளடக்கப் பகுப்பாய்வின் மூலம் இரண்டாம் நிலைத் தரவுகள்; மீளாய்வுகளுக்குட்படுத்தப்பட்டு, பெறப்பட்ட தரவுகள் விவரணப்பகுப்பாய்வு முறை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளூராட்சி அரசாங்கங்க அலகுகளுக்கான அதிகாரப்பரவலாக்க முறைமை, கட்டமைப்பு மற்றும் அதன் சுயாதீனமான தொழிற்பாடு குறித்த பொதுவான முறைமையொன்று இல்லை என்பதனையும் அவை கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையே பல இடை வெளிகளை கொண்டுள்ளமையினையும் உள்ளளளளூராட்சி அரசாங்கங்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்படாமை, பிரிவினைவாதம் ஏற்படும் மற்றும் மத்தியரசு பலவீனப்படுத்தப்படும் போன்ற பீதிகளினால் மிகக் குறைந்தளவான சுயாதீனத்தையே இலங்கை உள்ளூராட்சி அரசாங்கங்கள் அனுபவிக் கின்றமையினையும் இவ்வாய்வு வெளிப்படுத்துகின்றது.

Description

Citation

Kalam: International Research Journal, 13(4); 212-225

Endorsement

Review

Supplemented By

Referenced By