ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை தமிழிற்கு மொழிபெயர்த்தலும் அதிலுள்ள சிக்கல்களும்: Hon. ரவூப் ஹக்கீம் அவர்களின் "WE ARE A PART NOT APART" எனும் நூலிலுள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரைகளை மொழிபெயர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, oluvil, 32360, Sri Lanka

Abstract

மொழி என்பது மனித சமுதாயத்தின் அடிப்படையான தொடர்பு சாதனமாகவும், கருத்துப்பரிமாற்ற ஊடகமாகவும் தொழிற்படுகின்றது. அதாவது பிறருடன் கருத்துக்களை பரிமாறும் போது சில வேளைகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய நிலை தோன்றுகின்றது. இந்தவகையில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலுள்ளவற்றை கருத்து சிதைவின்றி இன்னுமொரு மொழிக்கு மாற்றுவதாகும். இவ்வாறு மொழிபெயர்ப்பு செய்யும் போது பல்வேறுபட்ட காரணிகளின் நிமித்தம் மொழிபெயர்ப்பில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இந்த வகையில் இவ் ஆய்விற்காக கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களால் எழுதப்பட்ட WE ARE A PART NOT APART எனும் ஆங்கில மொழியிலான நூலிற்கு இதுவரை தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்படாமையினை கருத்திற் கொண்டு இது தெரிவு செய்யப்பட்டு மொழிபெயர்ப்பு மேற் கொள்ளப்பட்டது. மேலும் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் WE ARE A PART NOT APART எனும் ஆங்கில மொழியிலான நூலின் முதலாம் மற்றும் மூன்றாம் கட்டுரைப்பகுதிகளை தமிழிற்கு மொழிபெயர்க்கும் போது ஏற்படும் சவால்களை அடையாளப்படுத்துவதை நோக்கமாக கொண்ட இவ் ஆய்வானது இரண்டாம் நிலைத்தரவுகளான நூல்கள், இணையத்தளம் ஆகியன பயன்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் மொழிபெயர்ப்பின் போது தோன்றிய சொல்நிலை சிக்கல்கள், ஒலிநிலை சிக்கல்கள், பிற மொழி சொற்களுக்கு பொருத்தமான நிகரனை இலக்கு மொழியில் கண்டறிய முடியாத நிலை, தொடரை, வாக்கியங்களை மையமாக கொண்ட சவால்கள் என்பன அடையாளப்படுத்தப்பட்டதோடு அதற்கான தீர்வுகளும் தௌிவாக முன் வைக்கப்பட்டது.

Description

Citation

8th International Symposium 2021 on “Promoting Faith-Based Social Cohesion through Islamic and Arabic Studies”. 4th August 2021. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 544-555.

Endorsement

Review

Supplemented By

Referenced By