இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில்வெளிநாட்டு நேரடி முதலிடடின் தாக்கமும் யுத்ததின் பின்னா் அதனை கவா்வதற்கான சிபாா்சுகளும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் அண்மைகாலமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை தமது பொருளாதார பிரச்சினைகளை தீா்ப்பதற்காக ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றது.இந்த வகையில் இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல இவ்வாய்வானது இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீடானது எத்தகய தாக்கத்தினை செலுத்துகின்றது என்பதினை மதிப்பீடு செய்வதனை நோக்காக கொண்டுள்ளது.இவ்வாய்வுக்கு 1978 தொடக்கம் 2009ம் ஆண்டு வரையுள்ள காலத்தொடா் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தாக்கத்தினை மதிப்பீடு செய்வதற்து பன்மடங்கு பிற் செலவு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது மாதிாியுருக்களை மதிப்பீடு செய்வதற்காக சாதரண இழிவு வா்க்க மதீப்பீட்டு முறை (OLS) பயன்னடுத்தப்பட்டது.தரவுகளை பகப்பாய்வு செய்வதற்கு Minitab, Excel, SAS ,Eviews முதலிய கணனி மென்பாகப் பொதிகள் பயன்படுத்தப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீடானது புள்ளி விபரரீதியாக பொருள்ள வகையில் நோ்க்கணியத் தாக்கத்தினை கொண்டுள்ளது என்பதனை ஆய்வு காட்டுகின்றது இருப்பினும் இத்தாக்கமானது குறிப்பிட்ட சில வருடங்களின் பின்னே மொத்த உள்நாட்டு உற்பத்தி மீது செல்வாக்கைினை செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேரும் இவ்வாய்வு யுத்ததின் பின்னா் இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம்மொத்த உள்நாட்டு உற்பத்தியில்முழுமையான பலனை அடைந்து கொள்வதற்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டினை கவா்வதில் எதிா் நோக்கும் பிசை்சினைகளையும் விவசாயம் கைத்தொழில் சேவைகள் துறைகளில் சில பொருத்தமான துறைகளையும் அடையாளம் காணப்பட்டு சிபாாிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Description
Citation
Proceedings of the 1st International Symposium 2011 on Post-War Economic Development through Science, Technology and Management, p. 192