சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் பொருளாதார மற்றும் சமூகப் பங்களிப்பு: சண்டிலிப்பாய் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஆய்வு

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka.

Abstract

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் பொருளாதார மற்றும் சமூக பங்களிப்பு எனும் ஆய்வானது சண்டிலிப்பாய் பிரதேசத்தினை மையமாகக் கொண்டது. இங்கு 58 சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகள் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டு அங்கு தொழில் புரியும் 84 தொழிலாளளர்களையும் ஆய்வுக்குட்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கமாக சிறிய நடுத்தர தெரழில் முயற்சிகளின் செயற்பாட்டின் மூலம் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கின்றதா? மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட சமூகப் பொறுப்புடன் செயற்படுகின்றன என்பது பற்றியதாகும். இந்த ஆய்வானது பண்பு சார்; மற்றும் அளவு சார் அணுகுமுறைகளைக் கொண்டமைந்தும் பகுப்பாய்வுக் கருவிகளாக பிற்செலவு அணுகுமுறைகளைக் கொண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு விபரண ரீதியான ஆய்வாக் காணப்படுகின்றது. உரிமையாளர்களிடமும், தொழிலாளாகளிடமும் ஒழுங்கமைக்கப்பட்ட வினாக் கொத்துக்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை பாகுப்பாய்வு செய்து முடிவுகள் பெறப்பட்டுள்ளன. சிறிய நடுத்தர தொழில் முயற்சிகளின் பொருளாதார, சமூக செயற்பாடானது தொழிலாளர்களின் வாழ்க்கைதரத்தினை அதிகரிக்கச் செய்கின்றது. பிற்செலவு பகுப்பாய்வில் R2=0.698 என்பது தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தினை அதிகரிப்பதில் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளானது 70% மாகச் செல்வாக்கு செலுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தொழில் முயற்சி நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்ட சமூகப் பொறுப்பு (Cooperate Social Responsibility - CSR) செயற்பாடுகளை 77% மேற்கொள்கின்றது. இங்கு தொழிலாளர்கள் மட்டிலான ஒன்றிணைக்கப்பட்ட சமூகப் பொறுப்பு செயற்பாடுகளை அதிகமாகச் செய்து வருவதுடன் சமூக சேவைகளை 40% மான நிறுவனங்கள் செய்து வருகின்றன. மேலும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளானது தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கினைக் கொண்டுள்ளன இந்த வளர்ச்சிற்கு நிறுவனங்களின் வருமானம் 60.5% மாகவும், தேறிய மூலதனத்தில் ஏற்படும் அதிகரிப்பு 45.2% மாகவும் செல்வாக்கு செலுத்துவதுடன் நிறுவனத்தின் பாதகமான காரணிகளின் செல்வாக்கு 17% மாக எதிர்கணியத்தில் செலவாக்கு செலுத்துகின்றன.

Description

Citation

7th International Symposium 2017 on “Multidisciplinary Research for Sustainable Development”. 7th - 8th December, 2017. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 461-470.

Endorsement

Review

Supplemented By

Referenced By