சேர் செய்யத் அஹ்மத் கான், கலாநிதி டி.பி. ஜாயாவின் கல்வி, சமூகப் பணிகள் குறித்த ஒப்பீட்டாய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka
Abstract
19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய உலகின் எழுச்சிக்கு இந்தயாவில் சேர். செய்யத் அஹ்மத் கான் மற்றும் இலங்கையில் டி.பி. ஜாயா ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை ஒப்பீட்டாய்வதே இவ்வாய்வின் இலக்காகும். முன்னையவர் மேற்குச் சூழலில் இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணற்ற நவீன கல்வியையும் ஆங்கிலத்தையும் கற்பிக்க முயற்சித்த அதேவேளை பின்னையவர் சமயச் சூழலில் முஸ்லிம்கள் நவீன கல்வியைப் பெற்று சமூக முன்னேற்றம் காண வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருந்தார். அத்தோடு சேர். செய்யத் அஹ்மத் கான் காலனித்துவ ஆட்சியாளர்களோடு நெருக்கமான உறவைப் பேணி தனது பணிகளை முன்னெடுக்க, கலாநிதி ஜாயா சுதேச தலைவர்களோடு நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார். இவ்வாறு தத்தம் கால சமூகம் எதிர்கொண்ட சவால்களை இவ்விரு தலைவர்களும் தமக்கே உரிய முறையில் அணுகியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கதாகும். சேர் செய்யத் அஹ்மத்கானின் கருத்துக்கள் இந்தியாவில் மாத்திரமன்றி தென்கிழக்காசியாவின் பல்வேறு நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்திவரும் அதேவேளை டி.பி.ஜாயாவின் கருத்துகள் உள்நாட்டில் தாக்கம் செலுத்தின.
Description
Keywords
Citation
Kalam: International Journal of Faculty of Arts & Culture, 8(2): 120-129.