தீவக இஸ்லாமிய மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கைகள் - ஓரு பார்வை

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka

Abstract

உலகிலுள்ள அனைத்து சமூகங்களிலும் நம்பிக்கைகள் என்பது பொதுவானதொரு அம்சமாகவே உள்ளது. குறித்த ஒரு சமூகத்தினது சிறப்பான கட்டமைப்புக்கு அச்சமூகம் சார்ந்த நம்பிக்கைகளே ஆதாரமாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு சமூகத்தினதும் அதன் தன்மைக்கு ஏற்ப அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளில் மாற்றங்களைக் காணலாம். இஸ்லாமிய சமூகத்தவர் மத்தியில் இறைவன் ஒருவனே என்பதை மையமாகக் கொண்ட பொதுவான நம்பிக்கையே காணப்படுகின்றது. ஆனபோதும் இவை இடத்துக்கிடம் வேறுபாடுகள், தனித்துவங்கள் போன்ற அம்சங்களைத் தாங்கியதாக உள்ளன. இலங்கையின் வடபகுதியிலமைந்த யாழ்ப்பாணத்தில் அதிலும் குறிப்பாகத் தீவகத்தில் வாழ்கின்ற இஸ்லாமியர்கள் மத்தியில் நம்பிக்கைகளின் தாக்கம் அதிகமானதாகவே உள்ளது. இதனை வெளிப்படுத்தும் முகமாகவே தீவக இஸ்லாமியர் மத்தியில் நிலவும் நம்பிக்கைகள் பற்றிய இத்தகைய ஆய்வானது காணப்படுகின்றது. இவ்ஆய்விலே தீவக இஸ்லாமிய மக்கள் மத்தியில் நிலவும் பொதுவான நம்பிக்கைகள், தனித்துவமான நம்பிக்கைகள், இத்தகைய நம்பிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் என்பவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏனைய இலங்கையில் வாழ்ந்து வருகின்ற அதிலும் சில மைல்களே வேறுபாடுகள் கொண்ட யாழ்ப்பாண நகரத்து இஸ்லாமிய மக்களிலிருந்து தீவக இஸ்லாமிய மக்களை அவர்கள் கொண்டுள்ள பண்பாட்டினடிப்படையில் தனித்துவமாக இனங்காண முடியும்.

Description

Citation

Second International Symposium -2015, pp 99-101

Endorsement

Review

Supplemented By

Referenced By