மருத்துவ ஒழுக்கக் கொள்கைளின் தோற்றமும் வளர்ச்சியும்

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka.

Abstract

மருத்துவ ஒழுக்கம் முறையானதொரு துறையாக வளர்ச்சி கண்டமை ஒப்பீட்டளவில் புதியதாகும். ஆனால், அது மிக வேகமாக முன்னேறிச் செல்லும் பகுதியாகும். மருத்துவ ஒழுக்கம் கடந்த நூற்றாண்டு வரை ஒரு முக்கிய ஆராய்ச்சித் துறையாக இருக்கவில்லை. இப்போதெல்லாம் மருத்துவ ஒழுக்கத்தில் பலரும் கொண்டுள்ள அக்கறை தவிர்க்க முடியாதது. ஏனெனில், நாம் அன்றாட வாழ்க்கையில் மருத்துவ ஒழுக்க சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம். அதில் உயிரியல் மருத்துவப் பிரச்சினைகளில் ஒழுக்க முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை இன்றியமையாதது. வரலாற்று நோக்கில் மருத்துவ சிகிச்சை தொடர்பாக எழும் ஒழுக்கப் பிரச்சினைகள் நீண்டகாலமாகவே தொடருகின்றன. எனவே இவ் ஆய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கம் மருத்துவ விஞ்ஞானத்தை ஒழுக்கக் கண்ணோட்டத்தில் அணுகுவதாகும். நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ ஒழுக்கங்களின் உறவை மெய்யியல் கண்ணோட்டத்தில் ஆராய்வது இவ் ஆய்வின் மற்றொரு நோக்கமாகும். மருத்துவ ஒழுக்கம் பரந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. எனவே, இங்கு முடிந்தவரை திறமையற்ற தொழில்நுட்ப சொற்களஞ்சியத்தைத் தவிர்த்து உரைநடை பாணியின் கையாளுகை இடம்பெற்றுள்ளது. மருத்துவத்தில் ஒழுக்கப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு ஒரு வரலாற்று அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்த வரலாற்று அணுகுமுறை மருத்துவ விஞ்ஞானத்தின் தோற்றம் பற்றிய உண்மையைக் கண்டுபிடிப்பதில் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால், ஒழுக்கப் பிரச்சினைகளிலும் அக்கறை கொண்டுள்ளது. மருத்துவ நடைமுறையின் பாரம்பரிய முறைகள் அதன் நவீன கால நடைமுறையுடன் பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளன. மருத்துவத்தின் வரலாறு மற்றும் அதன் குறுக்கு கலாச்சார முன்னோக்குகள் இரண்டும் மருத்துவத்தின் நடைமுறைப் போக்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஒழுக்கங்களின் வரலாறு சமகால விவாதங்களுக்காக வளர்க்கப்பட்டு, வரலாற்று ரீதியாக அணுகப்பட்டுள்ளது என்பதை விளக்குவதற்கு இந்த ஆய்வுக் கட்டுரை முயற்சிக்கின்றது

Description

Citation

Kalam: International Research Journal, 13(4); 176-190.

Endorsement

Review

Supplemented By

Referenced By