உலமாக்களின் மும்மொழி பற்றிய மதிப்பீடு: கம்பஹா மாவட்ட அத்தனகல்ல தேர்தல் தொகுதியை மையப்படுத்திய ஆய்வு

dc.contributor.authorமாஸின், எம்.என்.எம்.
dc.contributor.authorஅப்துர் ரஹீம், எஸ்.ஏ.
dc.contributor.authorரிஸ்லா, எம்.எச்.எப்.
dc.date.accessioned2019-10-24T10:33:17Z
dc.date.available2019-10-24T10:33:17Z
dc.date.issued2018-12-17
dc.description.abstractமொழி ஒருவரின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் மற்றொருவருக்கு தெரிவிக்கும் மிகச் சிறந்த ஊடகமாகும். இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் உலமாக்களுக்கு முக்கியமானதும் அவசியமானதுமான திறனாக மொழித்திறன் காணப் படுகின்றது. இலங்கையில் சிங்களம், தமிழ் , ஆங்கிலம் போன்ற மொழிகள் முக்கிய மொழிகளாக காணப்படுகின்றன. எனவே உலமாக்கள் மும்மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது அவசியமாகின்றது. அந்தவகையில் இவ் ஆய்வு, கம்பஹா மாவட்ட அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் வசிக்கும் மற்றும் தொழில் புரியும் உலமாக்களில் மும்மொழிப் புலமையை மதிப் பிடல் மற்றும் அதில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்பவற்றை இனங்காணல் எனும் பிரதான நோக்கங்களை அடிப் படையாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டது. ஆதற்காக கம்கஹா மாவட்ட அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் வசிக்கும், தொழில் புரியும் உலமாக்களில் 50 நபர்கள் எழுமாறாக தெரிவு செய்யப் பட்டு வினாக்கொத்துகள் பகிரப்பட்டு, சேமிக்கப் பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து இவ் ஆய்வு மேற் கொள்ளப் பட்டது. பெறுபேறுகளின் படி, உலமாக்களினல் அதிக பெறும்பான்மையினர் தமிழ் மொழியில் வாசிப்பு, எழுத்து, கேட்டு விளங்குதல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்று விளங்கியதோடு, சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50%அல்லது அதற்கு குறைவானவர்களே வாசிப்பு, பேச்சு, எழுத்து, கேட்டு விளங்குதல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்று காணப்பட்டனர். மொழியை விருத்தி செய்து கொள்ள தடையாக அமைந்த காரணிகளில் அதிக வேலைப்பளு என்பது பிரதான காரணியாக அடையாளப்படுத்தப்பட்டது. வழிகாட்டல் இன்மை தாய்மொழிச் செல்வாக்கு என்பனவும் காரணங்களாக இனங்காணப்பட்டன. உலமாக்களின் மும்மொழிப் புலமை விருத்தி தொடர்பான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இவ் ஆய்வு உறுதுணையாக இருக்கும் என்பது ஆய் வாளர்களின் எதிர்பார்ப்பாகும்.en_US
dc.identifier.citation8th International Symposium 2018 on “Innovative Multidisciplinary Research for Green Development”. 17th - 18th December, 2018. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lankaen_US
dc.identifier.isbn978-955-627-141-6
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/3820
dc.language.isootheren_US
dc.publisherSouth Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lankaen_US
dc.subjectமும்மொழிen_US
dc.subjectபுலமைen_US
dc.subjectஉலமாக்கள்en_US
dc.subjectஅத்தனகல்ல தேர்தல் தொகுதிen_US
dc.titleஉலமாக்களின் மும்மொழி பற்றிய மதிப்பீடு: கம்பஹா மாவட்ட அத்தனகல்ல தேர்தல் தொகுதியை மையப்படுத்திய ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
45-52.pdf
Size:
233.08 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: