ஆசிரியர்களின் தொழில் திருப்தியும் ஆசிரியரிய வளமுகாமைத்துவமும்: ஓர் இலக்கியமீளாய்வு
Loading...
Date
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.
Abstract
மனிதவள முகாமைத்துவ அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியவள
முகாமைத்துவ நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியவள முகாமைத்துவ
பிரயோக நிலைமைகளை கல்வி ஊடாக பாடசாலை மட்டத்தில் வலுப்படுத்துவதற்கும்
கல்வியின் தேசியக் குறிக்கோள்களையும் பாடசாலையின் தொலைநோக்குகளையும்
அடைவதற்கும் தேசியமட்ட கொள்கைகள், ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்புக்கள்,
விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் ஊடாக தேசியஇ மாகாண
மற்றும் வலயரீதியில் முகாமைத்துவ நடைமுறைகள் உருவாக்கப்பட்டு ஆசிரியவள
முகாமைத்துவம் அமுலாக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் ஆய்வாளரினால்
“ஆசிரியர்களின் தொழில் திருப்தியும் ஆசிரியவளமுகாமைத்துவமும் - ஓர்
இலக்கியமீளாய்வு” ஆய்வுத்தலைப்பு தொடர்புடைய அனுபவம்சார் இலக்கிய உசாவுகையை
அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியவள முகாமைத்துவத்தை
நடைமுறைப்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் எவை? ஆசிரியவள
முகாமைத்துவத்திற்கும் ஆசிரியர்களின் தொழில் திருப்திப் பண்புக்கூறுகளுக்கு இடையிலான
தொடர்பு எவ்வாறு உள்ளது? ஆகிய ஆய்வு வினாக்களை அடிப்படையாகக் கொண்டு
ஆசிரியவளமுகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும்
காரணிகளை இனங்காணல். ஆசிரியவளமுகாமையின் பண்புக்கூறுகளான நியமனம்,
ஆட்சேர்ப்பு
.இ பதவிஉயர்வுஇ இடமாற ;றம்இ தரங்கணிப்புஇ வாண்மைத்துவவிருத்திஇ
ஊக்கப்படுத்தல்இ ஆளணிப்பகிர்வுஇ மேற்பார்வை போன்ற காரணிகள் எவ்வாறான
தாக்கத்தைக் கொண்டுள ;ளன என்பதை கண்டறிதல் ஆய்வின் நோக்கங்களாக அமைகின்றன.
தொடர்புடைய அனுபவம்சார் இலக்கிய உசாவுகை ஆய்வுக்கட்டுரைகள்இ ஆய்வுஅறிக்கைகள்இ
ஆய்வுச்சஞ்சிகைகள் மற்றும் ஆய்வுச்சுருக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு தரவுகள்
பெறப்பட்டு பண்புசார் ஆய்வு அணுகுமுறையில் உள்ளடக்கப்பகுப்பாய்வு உட்படுத்தப்பட்டது.
ஆசிரியர்களின் தொழில் திருப்திப் பண்புக்கூறுகளான நியமனம்இ ஆட்சேர்ப்பு. பதவிஉயர்வு,
இடமாற்றம், தரங்கணிப்பு, வாண்மைத்துவவிருத்தி, ஊக்கப்படுத்தல். ஆளணிப்பகிர்வு.
மேற்பார்வை போன்ற காரணிகள் நேரான மற்றும் எதிரான தாக்கத்தை கொண்டுள்ளன.
அதேவேளை உள்ளக வெளியக காரணிகளான அரசியல் சமூகக் கராணிகள் மற்றும்
தனிப்பட்ட காரணிகள் ஆசிரியர்களின் தொழில் திருப்தியில் குறிப்பாக செல்வாக்குச்
செலுத்துகின்றன.
Description
Keywords
Citation
Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,14(3), 2021. pp. 128-139.