கல்முனை முஸ்லிம்களது திருமண சம்பிரதாயத்தில் நிகாஹ் நடைமுறை: ஓர் இஸ்லாமியப் பார்வை

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka

Abstract

முஸ்லிம்களது திருமணச் சம்பிரதாய நடைமுறையில் பிரதான ஒன்றாகவும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபாடுகளைக் கொண்டமைந்த நிகழ்வாகவும் அமைகிறது. இந்தவகையில் முக்கிய பிரதேசங்களில் ஒன்றான கல்முனை பகுதி முஸ்லிம்களின் திருமணத்தில் நிகாஹ் ஒரு வைபவ நிகழ்வாக இடம் பெறுகிறது. இவ்வாய்வின் பிரதான குறிக்கோள் கல்முனை முஸ்லிம்களது திருமணம் இஸ்லாமிய அடிப்படைப் போதனைகளுடன் இயைந்து செல்கின்றதா என்பதை பரிசீலிப்பதாகும். அளவுசார், பண்புசார் ஆய்வு முறையில் அமைந்த இவ்வாய்வுக்காக கல்முனை முஸ்லிம்களது நிகாஹ் செயற்பாட்டை விளக்க முதலாம் நிலைத்தரவுகள் வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் என்பவை மூலம் பெறப்பட்டன. வினாக்கொத்து மூலமான தொகை ரீதியான தரவுகள் கணனி மென்பொருள் ளுPளுளு மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளான நூல்கள், சஞ்சிகைகள் இணையத்தள ஆக்கங்கள் என்பன மீளாய்வுக்குட்படுத்தி இவ்வாய்வுக்கான கோட்பாட்டு அமைப்புத்திட்டம் நிறுவப்பட்டது. கல்முனை முஸ்லிம்களது திருமணத்தில் நிகாஹ் ஒரு வைபவமாகவே இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்வில் மணமகன், மணமகள், ஈஜாப் - கபூல், சாட்சி, வலி, திருமண குத்பா போன்ற விடயங்களில் இஸ்லாமிய நிகாஹ் வழிமுறைகள் சிரத்தையாக பேணப்படுகின்றது. காவின் பதிவு, குடி மரைக்காரை சாட்சியாக நியமித்தல், வட்டாகட்டுதல் போன்ற செயற்பாடுகள் இஸ்லாமன்றி பாரம்பரிய வழக்கத்தைகைக் கொள்வதாகவே உள்ளது. மேலும் மணமகனுக்கு தங்கமோதிரம் அணிவித்தல், பெண்ணின் முதலுரிமை வலி இருக்க அடுத்தவரை நியமித்தல், சுபநேரம் குறித்தல் என்பன இஸ்லாமிய விதிமுறைகளுக்கு உடன்படாதவையாக அமைகிறது. பொதுவாக நிகாஹ் நிகழ்வு, திருமண வைபவத்தின் ஒரு பகுதியாகவே இடம்பெறுகின்றது. இவ்வாய்வு திருமண சம்பிரதாயம் பற்றிய ஒரு ஆவணமாகவும் மாற்றத்தை வேண்டிநிற்கும் அறிவுறுத்தல்களைக் கொண்ட விழிப்புணர்வை ஏற்படுத்தவல்லதாகவும் அமைந்திடவல்லது.

Description

Citation

3rd International Symposium. 30 May 2016. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka.

Endorsement

Review

Supplemented By

Referenced By