குற்றமும்‌ தண்டனையும்‌ பற்றிய விவாதங்கள்‌

Loading...
Thumbnail Image

Authors

றியால்‌, ஏ. எல்‌. எம்‌.

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Department of Social Sciences, Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka.

Abstract

மனிதன்‌ தோன்றி வளர்ந்த காலம்‌ முதலே குற்றம்‌ என்பதுவும்‌ தோன்றி விட்டது. குற்றம்‌ என்பது ஒரு செயலாகவும்‌ இருக்கலாம்‌ அல்லது செயலை செய்யத்‌ தவறியதாகவும்‌ இருக்கலாம்‌. மேற்படி. இரன்டும்‌ பொதுச்‌ சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும்‌. இதனை நேரடியாக செய்வதும்‌ செய்யச்‌ சொல்லுவதும்‌ குற்றம்‌ எனப்படும்‌. இந்தக்‌ குற்றங்களை சட்டத்தில்‌ குற்றம்‌ என்று குறிப்பிட்டு தண்டனை வழங்க வேண்டும்‌ என்ற நியதி உண்டாக்கப்பட்டுள்ளது. இத்தகைய தண்டனை இன்றைய சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்‌. மனிதன்‌ தன்னுடைய தேவையைப்‌ பூர்த்தி செய்யும்‌ பொருட்டு செயல்படும்‌ பொழுது அதில்‌ ஏற்படும்‌ தடைகளை விலக்க முற்படுகிறான்‌. அது சில பேளைகளில்‌ குற்றச்‌ செயலாக அமைகிறது. சில வேளைகளில்‌ குற்றம்‌ என அறியாமலே குற்றம்‌ புரிந்து விடுகிறான்‌. அது பிறருக்கு. பாதிப்பை ஏற்படுத்த வாப்ப்பாகின்றது. சமூகத்தில்‌ நிகமழும்‌ பல்வேறு நிகழ்வுகளில்‌ குற்றம்‌ என்றால்‌ என்ன? எவை குற்றம்‌? அதற்கான தண்டனைகள் என்ன? போண்ற குற்றம்‌ பற்றிய பொதுவான பார்வையை எடுத்தியம்புவது இக்கட்டுரையின்‌ நோக்கமாகும்‌. இவவாய்வினைச்‌ சரியான முறையில்‌ மேற்கொள்வதற்கு பின்வரும்‌ ஆய்வு முறையியல்கள்‌ பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, குற்றம்‌ தண்டனை தொடர்பான கோட்பாடுகளுக்கிடை யேயுள்ள தொடர்புகளை விளக்குவதற்கு ஓப்பியல்‌ ஆய்வு முறை, விபரண முறையியல்‌ என்பன பயன்படுத்தப்படுவதோடு இவ்வாய்வுக்குரிய தரவுகளாக, சண்முகசுப்பிரமணியம்‌ எழுதிய 'குற்ற இயல்‌ சட்டம்‌' என்ற நூலை பிரதானமாகவும்‌, குற்றம்‌ தண்டனை தொடர்பில்‌ விவாதிக்கும்‌ ஆய்வுக்‌ கட்டுரைகள், என்பனவற்றிலிருத்து பெறப்பட்டு இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றம்‌ என்ற சொல்விலேயே தண்டனை என்ற பொருளும்‌ கலந்திருக்கின்றது என்பதை விளக்குவதற்கும்‌ மீள்‌ மதிப்‌பீடு செய்வதற்கு.ம்‌ இக்கட்டுரை முயல்கின்றது.

Description

Citation

Journal of Social Review, 5(1); 35-55.

Endorsement

Review

Supplemented By

Referenced By